search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்"

    போலி டாக்டர்கள் பலர் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்து கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த ரியாஸ் (வயது 7) என்ற சிறுவன் மர்மகாய்ச்சலுக்கு பலியானான். இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பீதியடைந்தனர்.

    இந்தநிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு கண்காணித்தனர்.

    மேலும் அங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி, தூய்மை பணியும் மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. ரியாஸ் அங்குள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றது துணை இயக்குனருக்கு தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த நபர், டாக்டருக்கு முறையாக படிக்காதது தெரியவந்தது. அவருக்கு எச்சரிக்கை விடுத்த துணை இயக்குனர் கிளினிக்கை மூட உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கிளினிக் மூடப்பட்டது.

    இதுகுறித்து துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில்:- வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பலர் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
    ×